சுப்ரமணியபுரம் ரீ -ரிலீஸ்; ரசிகர்களுடன் படம் பார்த்து ரசித்த சசிகுமார்! - கஞ்சா கருப்பு
🎬 Watch Now: Feature Video

கோவை: 2008ஆம் ஆண்டு சசிகுமார் இயக்கத்தில் வெளியான படம் சுப்ரமணியபுரம். இப்படத்தில் ஜெய், சமுத்திரகனி, கஞ்சா கருப்பு ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். மதுரையின் வட்டார மொழி வழக்கில் உருவாகி இருந்த இத்திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று இருந்தது.
அண்மையில் இப்படம் ரீரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இப்படத்திற்கான வரவேற்பு முன்பு இருந்ததைப் போன்றே மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் கோவை அவினாசி சாலையில் உள்ள ப்ராட் வே சினிமாஸில் (Broadway Cinemas) இப்படம் திரையிடப்பட்டுள்ளது.
இப்படத்தைக் காண படத்தின் இயக்குநரும் நடிகருமான சசிகுமார் மற்றும் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் ஆகியோர் ப்ராட் வே சினிமாஸ் வந்து ரசிகர்களை சந்தித்தனர். பின்னர் பேசிய சசிகுமார், ''சுமார் 15 ஆண்டுகளுக்குப் பிறகு சுப்பிரமணியபுரம் ரீரிலீஸ் செய்யப்பட்டாலும், முன்பு எந்த எந்த காட்சியைப் பார்த்து திரையரங்குகளில் ரசிகர்கள் கைதட்டினார்களோ, அதே காட்சியைப் பார்த்து இப்போதும் கூட கைதட்டுகிறார்கள். இன்றைக்கும் இந்த மாதிரியான ஒரு கூட்டம் வரும் என்று எதிர்பார்க்கவில்லை" எனத் தெரிவித்தார்.