இலங்கை தேர் திருவிழா - தருமபுரம் ஆதீனம் தொடக்கி வைத்து வழிபாடு! - நல்லூர் கந்தசாமி கோயில்
🎬 Watch Now: Feature Video
Published : Sep 13, 2023, 3:50 PM IST
யாழ்ப்பாணம்: இலங்கை யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள நல்லூர் கந்தசாமி கோயிலில் நடைபெற்ற தேர் திருவிழாவை தருமபுரம் ஆதீனம் தொடக்கி வைத்து வழிபாடு நடத்தினர்.
இலங்கை யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த நல்லூர் கந்தசாமி கோயிலில் இன்று (செப்டம்பர் 13ஆம் தேதி) இரதோற்சவப் பெருவிழா (தேர் திருவிழா) இன்று காலை தொடங்கியது. இவ்விழாவை தொடக்கி வைக்க மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த தருமபுரம் ஆதீனத்தின் 27-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள். நேற்று விமானம் மூலம் சென்னையில் இருந்து இலங்கை சென்றார்.அப்போது இலங்கை இந்திய தூதரகம் திருக்கேதீஸ்வரம் திருப்பணி சபை, அகில இலங்கை இந்து மகா மன்றம் சார்பில் தருமபுரம் ஆதீனத்திற்கு பூரணகும்பம் மரியாதையுடன் வரவேற்பு வழங்கப்பட்டது.
முன்னதாக நேற்று பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்ட தருமபுரம் ஆதீனம் இன்று காலை இலங்கை யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள நல்லூர் கந்தசாமி கோயிலில் நடைபெறும் தேர் திருவிழாவை தொடக்கி வைத்து வழிபாடு மேற்கொண்டார். இதில் (நல்லூர்) நல்லை ஆதீன குருமகா சந்நிதானம் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து வழிபாடு நடத்தினர்.