திங்களூர் ஸ்ரீ கஞ்சம்மாள் மாராத்தாள் கோயில் கும்பாபிஷேகம்! - kumbhabhishekam in erode
🎬 Watch Now: Feature Video

ஈரோடு: திங்களூர் அருகே உள்ள அருள்மிகு ஸ்ரீ கஞ்சம்மாள் மாராத்தாள் திருக்கோயில் கும்பாபிஷேக விழா இன்று (ஆகஸ்ட் 21) வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துக் கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.
ஈரோடு மாவட்டம், திங்களூர் அருகே உள்ள நிச்சாம்பாளையம் பகுதியில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீ கஞ்சம்மாள் மாராத்தாள் திருக்கோயில். கோயில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கடந்த 8-ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று பவானி நதியில் தீர்த்தம் மற்றும் முளைப்பாரி எடுத்து வருதல், விக்னேசுவரா ஹோமத்துடன் முதல் கால பூஜை, இரண்டாம் கால பூஜை, கோபுர கலசம் நிறுவுதல் மற்றும் மூன்றாம் கால பூஜை நடைபெற்றது.
அதனைத்தொடர்ந்து, இன்று மங்கல இசையுடன் நான்காம் கால பூஜை மற்றும் வேத மந்திரங்கள் முழங்க, காசி, ராமேஸ்வரம் உள்ளிட்ட புன்னிய நதியில் இருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்தங்களை ஊற்றி அருள்மிகு கஞ்சம்மாள் மாராத்தாளுக்கு கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று சுவாமியை தரிசனம் செய்தனர். கும்பாபிஷேக விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கபட்டதுடன் அன்னதானமும் வழங்கப்பட்டது.