ETV Bharat / state

வன்கொடுமைக்கு உள்ளாகும் பெண்களின் பாதுகாப்பே முக்கியம்...பாஜக தலைவர் அண்ணாமலைக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பதில்! - MINISTER ANBIL REPLY TO ANNAMALAI

தமிழ்நாட்டில் நடைபெறும் பாலியல் வன்கொடுமை சம்பவங்களை பிற மாநிலங்களோடு ஒப்பிடுவதை விடவும் பெண்களின் பாதுகாப்பை நோக்கமாக கொண்டு அரசு செயல்படுகிறது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறியுள்ளார்.

பள்ளிக்கல்வித்துறை தகவல் மையத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு
பள்ளிக்கல்வித்துறை தகவல் மையத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு (Image credits-Etv Bharat Tamilnadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 20, 2025, 12:58 PM IST

சென்னை: பாலியல் வன்கொடுமை சம்பவங்களை பிற மாநிலங்களோடு ஒப்பிடுவதை விடவும் அவர்களின் பாதுகாப்புக்கே தமிழ்நாடு அரசு முக்கியத்துவம் தருகிறது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

பள்ளிக்கல்வித்துறை உதவி எண்: சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளி கல்வித்துறை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பள்ளிக் கல்வித் துறை தகவல் மையத்தின் 14417 சேவை எண் பிரிவில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, "பொது தேர்வு எப்படி எழுத போகின்றோம் என்பது குறித்து மாணவர்களுக்கு ஒரு பயம் இருக்கும், எனவே அத்தகைய மாணவர்களை ஊக்கப்படுத்தும் நோக்கம் மட்டுமல்லாமல், தேர்வு என்பது இன்னொரு வகுப்பு தேர்வு மாதிரி தான், எனவே அதுகுறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை, பாடத்தை புரிந்து கொண்டு தேர்வு எழுத வேண்டும் என ஆலோசனை கொடுத்து வருகின்றோம்.

சேவை மையத்தில் சுழற்சி அடிப்படையில் 24 மணி நேரமும் பணியாளர்கள் பணியாற்றுகின்றனர். அவர்களின் பணி குறித்து தெரிந்து கொள்வதற்காகவும், மாணவர்களின் அழைப்புகள் குறித்தும் தெரிந்து கொள்வதற்காக ஆய்வு மேற்கொண்டேன்.பள்ளி கல்வித்துறை அமைச்சராக மட்டுமல்லாமல் ஒரு அண்ணனாக சொல்கிறேன். பள்ளி கல்வித்துறை உங்களுக்கு உறுதுணையாக இருக்கும். உங்களுடைய சின்ன சின்ன சந்தேகங்களுக்கு கூட 24 மணி நேரமும் இயங்கும் இந்த எண்ணை அழைக்கலாம். உங்களுக்கு சேவையாற்ற நாங்கள் காத்துக் கொண்டிருக்கிறோம்.

கல்வித்துறையின் 14417 என்ற உதவி எண் குறித்து மாணவர்கள் மத்தியில் பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். 2023-24 ஆய்வின்படி, பாலியல் வன்கொடுமை தொடர்பாக 8 புகார்கள் பெறப்பட்டுள்ளன. இங்கு வரும் புகார்கள் குறித்து நடவடிக்கை எடுக்கும் இடத்தில் உள்ள நபர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும்.

முதலமைச்சர் உறுதி: மாணவிகள் எந்த ஒரு பயமும் இல்லாமல் தைரியமாக இருக்க வேண்டும். அவர்களுக்கு எதிரான வன்கொடுமை உள்ளிட்ட புகார்களுக்கு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தவறு யார் செய்தாலும் அவர்கள் எந்தவித பின்புலத்தில் இருந்து வந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் உறுதியாக கூறியுள்ளார். நீங்கள் அளிக்கும் புகாரின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் கவனத்துக்கும் கொண்டு செல்லப்படுகிறது.

6000 தலைமை ஆசிரியர்களுக்கு தலைமை பண்பு சார்பாக ஆலோசனை வழங்கி உள்ளோம். ஜூன் மாதம் ஒரு மிகப் பெரிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்த உள்ளோம். பள்ளி வளாகங்களில் பாலியல்ரீதியான குற்றச்சாட்டுகள் அதிகரித்து வருவதால் அன்பில் மகேஸ் பதவி விலக வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். பாஜக ஆளுகின்ற மாநிலமான உத்திரபிரதேசத்தில் கூட பெண்களுக்கு எதிரான பல பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. ஆனால், அந்த மாநிலத்தோடு ஒப்பிட விரும்பவில்லை. இந்தியாவில் எந்த மூலையில் இருந்தாலும் பெண்கள் பாதுகாப்பு என்பது மிகவும் முக்கியம். அனைத்து பெண்களும் எங்களின் சகோதரிகள், எங்களின் அம்மாக்கள் தான். இதில் உத்தரப்பிரதேசம், தமிழ்நாடு என்று இருக்கக் கூடாது. அனைத்து பெண்களும் பாதுகாப்போடு இருக்க வேண்டும்.

மாணவிகள் பாதுகாப்பில் உறுதி: மாணவிகள் தங்களை தாங்களே தற்காத்துக் கொள்வதற்கான தற்காப்பு கலையை கற்றுத் தருவதற்கு சர்வ சிக்ஷா அபியான் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதி தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. ஒன்றிய அரசு நிதி நிறுத்தினாலும் நம்முடைய அரசு அதனை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. நீங்கள் (மத்திய அரசு) எவ்வளவு நெருக்கடி கொடுத்தாலும் மாணவிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவையான செயல்களை தமிழ்நாடு அரசு செய்து வருகிறது. வருகின்ற பட்ஜெட்டில் மாணவிகள் பாதுகாப்பதற்கான புதிய திட்டங்கள் குறித்து தெரிவிக்கப்படும்.

மும்மொழி கொள்கையை வலியுறுத்தி பாஜக கையெழுத்து இயக்கம் நடத்தினால் அது இரு மொழி கொள்கைக்கு சாதகமாக அமையும். அதே போல தனியார் பள்ளிகளை மூட வேண்டும். அரசு பள்ளிகளில் மும்மொழிக் கொள்கை இடம்பெற வேண்டும் என்றும் சொல்கின்றனர். இது ஜனநாயக நாட்டில் ஆரோக்கியமான கருத்தாக இருக்காது.

இந்த பள்ளிகளில் பிள்ளைகளை படிக்க வைக்க வேண்டும் என்ற சுதந்திரம் பெற்றோர்களுக்கு உள்ளது. அதில் தலையிடும் உரிமை யாருக்கும் இல்லை. மாநிலத்திற்கான தனிக் கல்விக் கொள்கையில் பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வி என தனித்தனியாக பிரித்து ஆய்வு செய்யப்பட உள்ளது,"என தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.