அண்ணாமலையார் கோயிலில் குத்துவிளக்கு பூஜை.. 308 பெண்கள் பங்கேற்பு!
🎬 Watch Now: Feature Video
திருவண்ணாமலை: ஆடி மாத மூன்றாம் வெள்ளியையொட்டி அண்ணாமலையார் கோயிலில் நடைபெற்ற குத்துவிளக்கு பூஜையில் ஏராளமானபெண்கள் பங்கேற்று பராசக்தி அம்மனை வழிபட்டனர்.
நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாகவும், பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி தலமாகவும் விளங்கும் திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் திருக்கோயில் ஆடி மாத மூன்றாம் வெள்ளியையொட்டி சுமங்கலிகள் பங்கேற்கும் குத்துவிளக்கு பூஜை வெகு விமர்சையாக நடைபெற்றது.
அண்ணாமலையார் திருக்கோயிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் நேற்று இரவு (ஆகஸ்ட் 04) பராசக்தி அம்மன் எழுந்தருளினார். பராசக்தி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. மேலும், ஆடி மாதம் மூன்றாம் வெள்ளிக்கிழமை 308 சுமங்கலிகள் பங்கேற்ற குத்து விளக்கு பூஜை வெகு விமர்சையாக நடைபெற்றது.
இதில் பங்கேற்ற சுமங்கலி பெண்கள் 108 முறை பராசக்தி அம்மன் நாமத்தை உச்சரித்து குத்துவிளக்கு பூஜையை பக்தியுடன் மேற்கொண்டனர். ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாத மூன்றாம் வெள்ளிக்கிழமை அன்று அண்ணாமலையார் திருக்கோயிலில் சுமங்கலிகள் பங்கேற்கும் குத்துவிளக்கு பூஜை வெகு விமர்சையாக நடைபெறுவது என்பது குறிப்பிடத்தக்கது.