புது ஸ்கூட்டியில் விஷப்பாம்பு.. ஆர்டிஓ ஆபிஸில் நிகழ்ந்த ஷாக் வீடியோ! - dindigul district news
🎬 Watch Now: Feature Video
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வட்டார போக்குவரத்து அலுவலகம்(Dindigul RTO Office) செயல்பட்டு வருகிறது. இங்கு தினசரி இருசக்கர வாகனங்கள் பதிவு செய்தல், ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல் என்று பொதுமக்கள் அதிக அளவு நடமாட்டம் அதிகமாக காணப்படும் இடமாக உள்ளது. வழக்கம் போல் இன்று புதிதாக வாகனங்கள் பதிவு செய்வதற்காக வந்திருந்த மக்கள் தங்களது வாகனங்களை நீண்ட வரிசையில் நிறுத்திருந்தனர்.
அப்போது கொண்டுவரப்பட்ட வாகனங்களில் ஸ்கூட்டி கொம்பேறி மூக்கன் என்ற விஷப்பாம்பு இருந்ததைக் கண்டு அங்கிருந்த பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்துள்ளனர். இதனையடுத்து திண்டுக்கல் தீயணைப்பு துறை அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்ட உதவி தீயணைப்பு அலுவலர் சிவக்குமார் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சோதனையில் ஈடுபட்டனர். நீண்ட நேரத்திற்கு பிறகு ஜூபிடர் ஸ்கூட்டியில் மறைந்திருந்த விஷப் பாம்பை லாவகமாக பிடித்து அதனை வனத்துறையினரிடம் ஒப்படத்தனர். இந்த பாம்பு விவகாரத்தில் வாகனப் பதிவுக்கு வந்திருந்த பொதுமக்கள் சிறிது நேரம் பதற்றமடைந்தனர்.