VIDEO: விஏஓ இரு சக்கர வாகனத்தில் புகுந்த நல்ல பாம்பு... - snake entered in Thiruvidaimarudur vao two wheeler
🎬 Watch Now: Feature Video

தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருபவர் தினேஷ்குமார். இவர் தனது வீட்டிலிருந்து புறப்பட்டு திருவிடைமருதூர் வட்டாட்சியர் அலுவலகம் வந்த போது வாகனத்தில் ஏதோ சத்தம் வந்தது கண்டு திடுக்கிட்டு, சந்தேகத்துடன் வண்டியை நிறுத்திப் பார்த்துள்ளார். அப்போது வண்டியில் பாம்பு இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அங்கு சென்ற திருவிடைமருதூர் தீயணைப்புத் துறையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி இருசக்கர வாகனத்தில் இருந்த நல்ல பாம்பை உயிருடன் பிடித்தனர்.
Last Updated : Feb 3, 2023, 8:24 PM IST
TAGGED:
Snake in VAO Two Wheeler