சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் பகுதியில் சாம்சங் இந்தியா தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் ஏசி, வாஷிங் மெஷின், டி.வி. உள்ளிட்ட வீட்டு உபயோக எலெக்ட்ரானிக் பொருட்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்த தொழிற்சாலையில் 1500-க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்தநிலையில் கடந்த ஆண்டு தொழிற்சங்க அங்கீகாரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து தமிழ்நாடு அரசு தொழிலாளர் நலத்துறை தொழிலாளர்கள் மற்றும் சாம்சங் நிர்வாகம் இடையே பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தி தொழிற்சங்கம் அமைக்க உத்தரவாதம் கொடுத்தது. இந்த நிலையில் கடந்த மாதம் சாம்சங் இந்தியா தொழிற்சாலையில் சிஐடியு தொழிற்சங்கம் அமைப்பதற்கு போராட்டம் நடத்திய குணசேகரன், சிவனேசன் மற்றும் மோகன்ராஜ் ஆகிய மூன்று தொழிலாளர்கள் ஒழுங்கு நடவடிக்கை என்ற பெயரில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
இதையடுத்து சாம்சங் ஆலை தொழிலாளர்கள் 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிராக சிஐடியு தொழிலாளர்கள் ஆலை வளாகத்திற்கு உள்ளே உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து இன்றுடன் 17 வது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னதாக இரு தினங்களுக்கு முன்பு சென்னை தேனாம்பேட்டையில் தொழிலாளர் நலத்துறை முத்தரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. அப்போதும் சாம்சங் இந்தியா நிர்வாகம் மேலும் சிலர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க போவதாக திட்டவட்டமாக தெரிவித்து இருந்தது.
சாம்சங் நிர்வாகத்தின் இந்த பதிலால் போராட்டம் நடத்தி வரும் தொழிலாளர்கள் அதிருப்தி அடைந்த நிலையில், ஒப்பந்த ஊழியர்கள் மூலம் உற்பத்தி நடக்கும் இடத்திற்கு சென்று உற்பத்தியை தடுத்து நிறுத்தியதாகக் கூறப்படுகிறது. இந்தநிலையில் ஒப்பந்த தொழிலாளர்கள் மூலம் நடைபெறும் உற்பத்தியை தடுத்து நிறுத்தியதாக 13 ஊழியர்களை ஒழுங்கு நடவடிக்கை என்ற பெயரில் சாம்சங் இந்தியா நிறுவனம் பணியிடை நீக்கம் செய்து உள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த சாம்சங் இந்தியா தொழிலாளர்கள் தொழிற்சாலை வளாகத்திற்குள் நடைபெற்று வரும் போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளனர்.
இதனால் தொழிற்சாலை வளாகத்தில் போலீஸ்சார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட 13 தொழிலாளர்களும் சிஐடியு தொழிற்சங்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தொழிலாளர்கள் பணியிடை நீக்கம்: 17-வது நாளாக நீடிக்கும் சாம்சங் ஊழியர்கள் போராட்டம்! - SAMSUNG PROTEST
பணியிடைநீக்க நடவடிக்கையைக் கண்டித்து சாம்சங் தொழிலாளர்கள் 17-வது நாளாக தொடர்ந்து உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Published : Feb 21, 2025, 3:35 PM IST