சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் - ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு! - சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயில்
🎬 Watch Now: Feature Video
பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூரில் அருள்மிகு மதுரகாளியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. மாவட்டத்தின் பெருமை மிகு அடையாளங்களில் ஒன்றாகவும், சக்தி ஸ்தலங்களில் பிரசித்திபெற்ற ஸ்தலமாகவும் விளங்கும் இத்தலம் ஸ்ரீஆதி சங்கரர் வழிபாடு செய்த தலமாக விளங்குகிறது.
மதுரையை எரித்த கண்ணகியின் சினம் தணிந்த புண்ணிய பூமியாக விளங்கும் இத்தலத்தில் செல்லியம்மன் இருந்ததாகவும், கண்ணகியே மதுரகாளியம்மனாக அருள்புரிவதாகவும் கூறப்படுகிறது. திங்கள், வெள்ளி, அமாவாசை, பெளர்ணமி ஆகிய தினங்கள் மட்டுமே இத்திருத்தலம் திறந்து இருக்கும். இத்தகைய நாட்களில் அம்மன் இங்கு அருள்புரிவதாகவும், மற்ற நாட்களில் கோயிலை ஒட்டியுள்ள பெரியசாமி மலையில் அம்மன் அருள்புரிவதாகவும் ஐதீகம்.
பில்லி, சூனியம், ஏவல் உள்ளிட்ட இடர் அகற்றி வேண்டுவோருக்கு வேண்டும் தரம் இத்திருக்கோயில் புனரமைக்கப்பட்டு ஆண்டுகளுக்குப் பிறகு குடமுழுக்கு விழா நடைபெற்றது. குடமுழுக்கு விழாவானது மார்ச் 27ஆம் தேதி யானை முகத்தான் வழிபாடு தொடங்கி 61 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு லஷ்மி வேள்வி, வாஸ்து பூஜை, மூர்த்தி வேள்வி, சாந்தி வேள்வி பூஜைகள் நடைபெற்றன.
தொடந்து ஏப்.2ஆம் தேதி முளையிடல், திருக்காப்பு அணிவித்தல், இறை சக்திகளை கும்பத்தில் இறக்குதல் பதினாறு தீப வழிபாடோடு யாக வேள்வி பூஜை நடைபெற்றது. இதனை ஆறு கால யாக வேள்வி பூஜைகளோடு இறைசக்திகளை மூலவருக்கு சேர்த்தல், 96 வகையான மூலிகைப் பொருட்கள், பழ வகைகள் வேள்வியிடப்பட்டு மஹா தீபாராதனை நடைபெற்றது.
தொடர்ந்து யாகசாலையிலிருந்து மேளதாளம் முழங்க பக்தி பரவசத்துடன் கடங்கள் புறப்பாடு நடைபெற்றது. இதனையடுத்து கடங்கள் கோபுர விமானங்களுக்கு சென்றடைந்த பின், சிறப்பு பூஜைகளுக்கு பிறகு ராஜகோபுரம் மற்றும் விமானங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது. இதனையடுத்து அருள்மிகு மதுரகாளியம்மன், அய்யனார், மற்றும் பரிவாரங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு மஹா தீபாராதனை நடைபெற்றது. இந்த குடமுழுக்கு விழாவில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு கோபுர தரிசனம் செய்தனர்.
இதையும் படிங்க: ''தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்'' - சிவன் கோயில் கட்டி, அதில் தந்தைக்கு சிலை வைத்த மகன்கள்