மற்ற மாநிலங்களில் தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளார்களா? - சீமான் சரமாரி கேள்வி

By

Published : Mar 5, 2023, 4:40 PM IST

thumbnail

திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில், கடந்த ஏழு நாட்களாக குறவன் இன மக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் தங்களுக்கு பட்டியல் இனச் சான்றிதழ் வழங்கக்கோரி முட்டி போட்டு போராட்டம், தர்ணா போராட்டம், பட்டினி போராட்டம், ஒப்பாரி போராட்டம் என பலகட்ட போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இந்தப் போராட்டத்துக்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போராட்டத்தில் ஈடுபட்டு, கண்டன உரையாற்றினார். 

இதனைத் தொடர்ந்து சீமான் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பாஜகவும், சீமானும்தான் வடமாநிலத்தவர்கள் பிரச்னைக்கு காரணம் என கே.எஸ்.அழகிரி கூறியது குறித்து பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்து பேசிய அவர், ''பைத்தியத்திற்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது. அவர் யார்? ராகுல் காந்தியை என்னிடம் பேசச் சொல்லுங்கள். முதலில் மற்ற மாநிலங்களில் தமிழர்கள் பாதுகாப்பாக வாழ்கின்றனரா என ஓர் குழு அமைத்து ஆய்வு செய்யுங்கள்'' என்றார். 

மேலும் குறவன் இன மக்கள் போராட்டம் குறித்து பேசிய சீமான், ''இவ்வளவு காலம் குடி சான்றிதழ் கொடுக்காமல் ஆதிக் குடிகளை வைத்துள்ளனர். இதனால் பரீட்சை எழுத முடியவில்லை. எழுதினாலும் வேலை கிடைக்கவில்லை. தற்போது பள்ளிக்குச் சென்று படிக்காமல் குழந்தைகள் வீதியில் ஏழாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அரசு இதனை கவனத்தில் எடுத்து, உடனடியாக தீர்வு காண வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம். 

இல்லையென்றால் அடுத்த கட்ட போராட்டத்தில் ஈடுபடுவோம். மேலும் இவர்கள் எளிய குடிகள் என்பதால், அதிகாரிகள் மெத்தனம் காட்டி சான்றிதழ்கள் வழங்கவில்லை. இதுவே அமைச்சர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்தால் வேலை நடக்கும். எளிய மக்களின் குரல் ஒலிக்கவில்லை. இப்பொழுதுதான் நாங்கள் வந்துள்ளோம். இது ஒரு நொடியில் தீர்க்க வேண்டிய பிரச்னை'' எனத் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.