29வது பிறந்தநாள் கொண்டாடிய சங்கரநாரயண சுவாமி கோயில் யானை கோமதி.. வைரலாகும் வீடியோ! - கோமதி யானை
🎬 Watch Now: Feature Video
Published : Oct 17, 2023, 6:41 PM IST
தென்காசி: சங்கரன்கோவிலில் உள்ள சங்கரநாராயண சாமி கோயிலில் கோமதி யானை உள்ளது. இந்த யானை சங்கர கோமதியம்மன் கோயிலில் நடைபெறும் சிறப்பு பூஜைகள் மற்றும் முக்கிய திருவிழாக்களின் போது, ஊர்வலங்களில் கலந்து கொண்டு பக்தர்களுக்கு ஆசி வழங்குவது வழக்கம்.
கடந்த 1997-ஆம் ஆண்டு தொழிலதிபர் சி.பா.சிவந்தி ஆதித்தனார் இந்த யானையைக் கோயிலுக்கு வழங்கினார். பக்தர்களால் கோமதி என்று செல்லமாகப் பெயரிடப்பட்ட இந்த யானை சிறப்பாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கோமதி யானையின் 29-வது பிறந்தநாள் கொண்டாட்டம் சங்கரநாரயண சாமி கோயிலில் இன்று (அக்.17) சிறப்பாக நடந்தது.
இதில், யானைக்குப் பிறந்தநாள் என்பதை அறிந்து மகிழ்ச்சியடைந்த பக்தர்கள், அன்போடு யானைக்குப் பழங்களை வாங்கி வந்திருந்தனர். கோயில் நிர்வாகத்தின் சார்பாக நடந்த இந்த பிறந்தநாள் விழாவில், கோமதி யானை பக்தர்கள் வாங்கி கொடுத்த பழங்களை அன்போடு சுவைத்தது.
அதனைத் தொடர்ந்து, கோமதிக்குக் கோயில் சார்பாக கஜ பூஜைக்கு ஏற்பாடு செய்திருந்தனர். பூஜையைத் தொடர்ந்து நடைபெற்ற தீபாராதனை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பக்தர்களுக்குக் கோமதி யானை ஆசி வழங்கியது. இந்த சிறப்பு நிகழ்ச்சியில் எண்ணற்ற பக்தர்கள் உற்சாகமாகக் கலந்து கொண்டனர்.