Rajinikanth: புதுச்சேரியில் 'லால் சலாம்' படப்பிடிப்பு.. ரஜினியை காணக் குவிந்த ரசிகர்கள்! - movie updates

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jun 2, 2023, 1:14 PM IST

புதுச்சேரி: லைகா நிறுவனம் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லால் சலாம்(lal salaam)திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பு ஏற்கனவே மும்பை, திருவண்ணாமலை உள்ளிட்ட இடங்களில் நடந்து முடிந்துள்ளது. 

இதனைத் தொடர்ந்து, இப்படத்திற்கான அடுத்தக் கட்ட படப்பிடிப்பு, நேற்று (ஜூன் 1) புதுச்சேரியில் உள்ள ஏ.எப்.டி (Anglo french textile) மில் பழைய வளாகத்தில் நடைபெற்றது. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் கவுரவ வேடத்தில் நடித்து வரும் நிலையில், ரஜினியை பார்க்க ஏஎப்டி மில் பகுதியில் குவிந்தனர்.

பின்னர், படப்பிடிப்பை பாதிக்காத வகையில் ரசிகர்கள் யாரும் மில் உள்ளே நுழைவதை தடுக்க  நுழைவுவாயில் பூட்டப்பட்டது. பின்னர், இதுகுறித்து படப்பிடிப்பு குழுவினரை தொடர்புகொண்டு கேட்டபோது, சண்டை காட்சிகளை படம்பிடிக்க படக்குழுவினர் புதுச்சேரிக்கு வந்துள்ளனர் என்றும் மேலும், 10 நாட்கள் படபிடிப்பு நடக்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

பின்னர், அந்த படப்பிடிப்பில் நடிகர் ரஜினிகாந்த் இடம்பெறவில்லை என கூறியதை தொடர்ந்து ரசிகர்கள் கலைந்துச் சென்றனர்.. அதே நேரத்தில் ரோடியர் மில் வளாகத்தில் படப்பிடிப்பு செட் அமைக்கும் பணி நடைபெற்றது. அதில் நடிகர் ரஜினிகாந்த் நடந்துச் சென்ற காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: தேவர் மகன் படத்தில் ‘இசக்கி’ கதாபாத்திரமே மாமன்னன் - மாரி செல்வராஜ்

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.