கொடைக்கானல் சுற்றுலா செல்லத் தயாரா? - மழையால் எழில் கொஞ்சி வரும் இயற்கை!
🎬 Watch Now: Feature Video
திண்டுக்கல்: மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானல் உலகளாவிய சுற்றுலாத்தலமாகும். கொடைக்கானலில் முக்கிய சுற்றுலாத் தலங்கள் பெரும்பாலும் இயற்கை காட்சிகளாக இருந்து வருகிறது. இந்த நிலையில், கொடைக்கானல் மலைப்பகுதிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரும் அழகுதான். இதனைக் கண்டு ரசிப்பதற்காக பல்வேறு இடங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகளும் வருகை புரிவர்.
கொடைக்கானலில் கடந்த ஒரு வார காலமாக கொடைக்கானல் நகர் பகுதி மற்றும் கொடைக்கானலைச் சுற்றியுள்ள மேல்மலை மற்றும் கீழ் மலை உள்ளிட்ட பல்வேறு கிராமப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில், கடந்த ஐந்து நாட்களில் மட்டும் கொடைக்கானலில் 20 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளதால் நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
இது மட்டுமல்லாது கொடைக்கானலில் உள்ள பல்வேறு அருவிகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடத் துவங்கி உள்ளது. குறிப்பாக, கொடைக்கானல் முகப்பு பகுதியில் உள்ள வெள்ளி நீர்வீழ்ச்சி, வட்டக்கானல் அருவி, புலவிசார் அருவி, அஞ்சுவீடு அருவி உள்ளிட்ட பல்வேறு அருவிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடத் துவங்கியுள்ளது. மேலும், மலையால் சாலைகளில் திடீர் அருவிகளும் உருவாகி உள்ளது.