தங்கை மீது பனிக்கட்டி வீசி விளையாடிய ராகுல் காந்தி - வைரலாகும் க்யூட் வீடியோ.! - பாரத் ஜடோ யாத்திரை
🎬 Watch Now: Feature Video
ஶ்ரீநகர்: கன்னியாகுமரியில் தொடங்கி பல்வேறு மாநிலங்களை கடந்து வந்த ராகுல்காந்தியின் பாரத் ஜடோ யாத்திரை இன்று(ஜன.30) காஷ்மீரில் நிறைவடைந்தது. கொட்டும் பனிமழையில் ஸ்ரீநகரில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் தேசிய கொடியை ஏற்றி வைத்து, யாத்திரையை முடித்துக் கொண்டார் ராகுல்காந்தி.
இந்த நிலையில், பாரத் ஜடோ யாத்திரையின் இறுதிநாள் நிகழ்வுகள் தொடர்பான பல்வேறு வீடியோக்களை காங்கிரஸ் கட்சி தங்களது சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பாக ராகுல்காந்தியும், அவரது சகோதரி பிரியங்கா காந்தியும் பனிக்கட்டியால் அடித்துக் கொண்டு விளையாடும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
அதில், ராகுல்காந்தி கைகளில் பனிக்கட்டிகளை மறைத்து எடுத்துவந்து பிரியங்காவின் தலையில் வைத்து உடைக்கிறார், உடனே ராகுல்காந்தியை துரத்திச்சென்று பிரியங்கா காந்தியும் பனிக்கட்டியால் அடிக்கிறார். மிகப்பெரிய யாத்திரையை முடித்த ஆசுவாசத்தில், சகோதரனும் சகோதரியும் விளையாடும் இந்த க்யூட் வீடியோ காண்போரை கவரும் வகையில் உள்ளது.
இதையும் படிங்க: ஸ்ரீநகரில் மூவர்ண கொடியேற்றத்துடன் நடைப்பயணத்தை நிறைவு செய்த ராகுல் காந்தி