தென்திருப்பதியில் திரண்ட பக்தர்கள்! குடியாத்தம் வெங்கடேச பெருமாள் கோயிலில் புரட்டாசி மாத பால்குட வீதியுலா!
🎬 Watch Now: Feature Video
வேலூர்: புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதம் என கருதப்படுகிறது. ஆகையால் ஒவ்வொரு வருடமும் புரட்டாசி மாதம் சனிக்கிழமை அன்று பெருமாள் கோயில் எப்போது களைகட்டி காணப்படும். பெருமாள் பக்தர்கள் அனைவரும் இம்மாதம் முழுவதும் விரதமிருந்து கொண்டாடுவார்கள்.
தற்போது வேலூர் மாவட்டம் குடியாத்தம் பிச்சனூர் பேட்டையில் அமைந்துள்ள தென்திருப்பதி என்று அழைக்கப்படும் ஸ்ரீ ரங்கநாதர் வெங்கடேச பெருமாள் கோயில் மிகவும் பிரசித்து பெற்றது. தற்போது 28 ஆம் ஆண்டு புரட்டாசி மாதம் துவங்கிய நிலையில், இன்று புரட்டாசியின் முதல் சனிக்கிழமையை முன்னிட்டு, பெருமாளுக்கு பால் அபிஷேகம் செய்வதற்காக பக்தர்கள் பால்குடம் ஊர்வலம் முக்கிய வீதிகளின் வழியாக கொண்டு வந்தனர்.
பின்னர் ரங்கநாத வெங்கடேச பெருமாளுக்கு சிறப்பு பால் அபிஷேகங்கள் செய்யப்பட்டன. அதனைத் தொடர்ந்து, மூலவருக்கு சத்தியபாமா ருக்மணி வாசுதேவ கிருஷ்ணன் அலங்காரம் செய்யப்பட்டது. அப்போது ஏராளமாக பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தற்போது ரங்கநாதர் வெங்கடேச பெருமாள் கோயிலுக்கு சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் காலை முதல் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.