நான்காவது முறையாக செந்நிறமாக காட்சியளித்த புதுச்சேரி கடல்! - puducherry news
🎬 Watch Now: Feature Video
Published : Nov 8, 2023, 8:37 AM IST
புதுச்சேரி: புதுச்சேரி கடல் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக அலை சீற்றத்துடன் காணப்பட்டு வந்த நிலையில்,
புதுச்சேரியில் பழைய சாராய ஆலை முதல், வைத்திகுப்பம் மாசிமக திடல் வரை ஒரு கிலோ மீட்டர் நீளத்திற்கு கடல் நீர் மீண்டும் செந்நிறமாக காட்சி அளித்தது.
இதனை சுற்றுலாப் பயணிகளும், உள்ளூர் மக்களும் ஆர்வத்துடன் கண்டு வருகின்றனர். மேலும், நீரில் சென்று விளையாட அனுமதி மறுத்துள்ளனர். முன்னதாக, கடந்த அக்டோபர் 17 மற்றும் 19 ஆகிய தேதிகளில் புதுச்சேரி கடல் முதல் முறையாக செந்நிறமாக காணப்பட்டது.
மேலும், இந்த மாதத் தொடக்கத்தில் ஒரு முறை கடல் நீர் செந்நிறமாக காட்சியளித்தது. புதுச்சேரியில் அடிக்கடி கடல் நீர் செந்நிறமாக மாறி காட்சியளிக்கும் சம்பவம், புதுச்சேரி மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுவை மாசுக் கட்டுப்பாட்டு குழும அதிகாரிகள் கடல் நீரை ஆய்வு செய்ததில், கடல் நீரில் வேதிப் பொருட்கள் எதுவும் கலக்கவில்லை என தெரிவித்தனர். ஆனால், இது குறித்து தேசிய கடல் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆய்வறிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.