சமத்துவ பொங்கல் விழா: அதிகாரிகளுடன் மாட்டுவண்டியை இயக்கிய தென்காசி டிஎஸ்பி! - மாட்டு வண்டி
🎬 Watch Now: Feature Video
Published : Jan 15, 2024, 12:20 PM IST
தென்காசி : தமிழர்களின் பண்பாட்டு விழாவான தைத் திருநாளாம் பொங்கல் பண்டிகை இன்று (ஜன.15) நாடு முழுவது வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. முன்னதாக தமிழ்நாட்டில் உள்ள பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவகங்களில் 'சமத்துவ பொங்கல் விழா' சிறப்பாக கொண்டாடப்பட்டது. அந்த வகையில் தென்காசி மாவட்ட காவல்துறையினர் சார்பில் குற்றாலம் பகுதியில் சமத்துவப் பொங்கல் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த சமத்துவ பொங்கல் விழாவிற்கு தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி.கே.சுரேஷ்குமார் தலைமை தாங்கிய நிலையில், விழாவிற்கு வந்த காவல் கண்காணிப்பாளருக்கு மேளதாளங்கள் முழங்க பாரம்பரிய முறைப்படி, பரிவட்டம் கட்டப்பட்டு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, விவசாயம் செழிக்கவும், விவசாயிகளுக்கு பயன்படக்கூடிய பசு மாட்டிற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பசு மாட்டிற்கு 'கோ பூஜை' செய்து உணவளித்தார்.
மேலும் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் ஒன்றிணைந்து தமிழர்களின் பண்பாட்டு உடையான வேஷ்டி சேலைகள் அணிந்து சினிமா பாடல்களை பாடி தங்களது குடும்பத்தினருடன் ஆடிப்பாடி உற்சாகமாக பொங்கல் விழாவை கொண்டாடினர். பின்னர் காளை மாடுகள் பூட்டப்பட்ட மாட்டு வண்டியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் இயக்க, தென்காசி மாவட்டத்தில் உள்ள ஏடிஎஸ்பிக்கள் மற்றும் டிஎஸ்பிக்கள் அதில் உற்சாகமாக பயணம் செய்தனர்.