Video:குமரியில் லாரி டிரைவரிடம் லஞ்சம் வாங்கிய போலீசார் சஸ்பெண்ட் - Trafficking of mineral resources on Nagercoil road
🎬 Watch Now: Feature Video
கன்னியாகுமரியில் கனிம வளக் கடத்தல் டாரஸ் லாரிகள் மூலம் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது. தினசரி நாள் ஒன்றுக்கு 200 முதல் 300 லாரிகள் வரை கனிம வளங்கள் கடத்தப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. செல்லும் வழிகளில் உள்ள சோதனைச் சாவடியில் இருக்கும் போலீஸ்காரருக்கு லஞ்சம் கொடுத்து லாரிகள் கடந்து செல்வதாகவும், குற்றச்சாட்டு இருந்து வந்தது. அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய்மொழி அருகே நாகர்கோவில் நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் கனிம வளங்கள் கொண்டு செல்லும் டாரஸ் லாரி ஓட்டுநரிடம் நடுரோட்டில் இன்று(ஜன.27) போலீஸ்காரர் ஒருவர் எந்தவித கூச்சமும் இல்லாமல் லஞ்சம் வாங்கும் காட்சிகள் வைரலாகி வருகிறது. இச்சம்பவத்தை அறிந்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஹரிகிரண் பிரசாத் லஞ்சம் வாங்கிய காவலரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.