பிரதமர் மோடிக்கு கருத்து சொன்ன ஆசிரியர்; தமிழில் வாழ்த்துக் கடிதம் அனுப்பிய மோடி! - பரிக்சா பே சர்ச்சா
🎬 Watch Now: Feature Video


Published : Oct 22, 2023, 1:41 PM IST
தூத்துக்குடி: கோவில்பட்டி, கிருஷ்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி யசோதா. இவர் கோவில்பட்டி சுபாநகரில் உள்ள தனியார் பள்ளியில் 7ஆம் வகுப்பு ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வருகிறார். பிரதமர் நரேந்திர மோடி, மாணவர்களின் கல்வி மற்றும் எதிர்கால வளர்ச்சியை உருவாக்கும் வகையில் தொடங்கிய ‘பரிக்சா பே சர்ச்சா’ என்ற இயக்கத்தின் மூலம் யசோதா, கல்வி மற்றும் மாணவர்களின் தனித்திறன்கள் வளர்ச்சி குறித்த தனது கருத்துக்களை எடுத்துரைத்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் ஆன்லைன் மூலமாக தனது தலைப்பு குறித்து கருத்துக்களை கூறியுள்ளார்.
பள்ளியில் மாணவர்களின் பல்வேறு தனித்திறமைகளை வளர்க்கும் வகையில் கல்வி இருக்க வேண்டும். குறிப்பாக தலைமைப் பண்பு, பொதுமக்களிடம் எவ்வித தயக்கம் இல்லாமல் தங்களது கருத்துகளை எடுத்துரைப்பது என்று தனது கருத்துக்களை கூறியுள்ளார்.
இதற்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக பிரதமர் மோடி, ஆசிரியர் யசோதாவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்தக் கடிதத்தில், ஆசிரியை யசோதா தெரிவித்த கருத்துக்கள் மாணவர்களின் வளர்ச்சிக்கு முக்கியமானவையாக இருப்பதாகவும், இதற்கு பாராட்டுக்களையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்ளவதாக பிரதமர் தமிழில் குறிப்பிட்டுள்ளார்.