250 ஆடுகளுடன் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய நபர்.. இரவு முழுவதும் காத்திருந்த பரிதாபம்..! - காட்டாற்று வெள்ளம்
🎬 Watch Now: Feature Video
Published : Oct 30, 2023, 10:44 PM IST
தூத்துக்குடி: விளாத்திகுளம் அருகே உள்ள வடமலாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல். இவர் நூற்றுக்கணக்கான ஆடுகளை வைத்து ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில், நேற்று இரவு சக்திவேல், விளாத்திகுளம் அருகே உள்ள மாவிலோடை கிராமத்தில் அமைந்துள்ள பெரிய கண்மாய் பகுதியில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார்.
அப்போது அந்த பகுதியில் அதிகமான மழை பெய்ததால், திடீரென ஏற்பட்ட காட்டாற்று வெள்ளம் சூழ்ந்ததில் சக்திவேல் தனது 250 ஆடுகளுடன் கண்மாயிலிருந்து வெளியே வர முடியாமல் இரவு முழுவதும் சிக்கிக் கொண்டார்.
பின்னர், இன்று காலை கண்மாய் பகுதியில் ஆடுகள் நிற்பதையும், சக்திவேல் அங்கிருந்து கூச்சலிட்டதையும் அறிந்த அக்கிராமத்தினர் ஒருவர், கிராம மக்களுக்குத் தகவல் அளித்தார். அதனைத் தொடர்ந்து கிராம மக்கள் தீயணைப்புத் துறைக்குத் தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் கிராம மக்கள், கண்மாயிலிருந்து வெளியே வர முடியாமல் தண்ணீரில் தவித்துக் கொண்டிருந்த 250 ஆடுகளைத் தீவிரமாக முயற்சித்து இறுதியாக மீட்டனர்.
இதையும் படிங்க: மாலத்தீவில் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் போராட்டம்! நாடு திரும்ப மறுத்து ஆர்ப்பாட்டம்! என்ன காரணம்?