நவம்பர் மாதத்தில் காந்தி ஜெயந்தி கிராம சபைக் கூட்டமா? - ஊராட்சி நிர்வாகம் ஒட்டிய போஸ்டரால் மக்கள் குழப்பம்! - wrongly printed invitation to grama sabha meeting
🎬 Watch Now: Feature Video
Published : Nov 1, 2023, 6:35 PM IST
தேனி: நவம்பர் ஒன்றாம் தேதி உள்ளாட்சி தின விழாவை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள ஊராட்சிகளில் இன்று (நவ.1) கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. அந்த வகையில் தேனி மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு இன்றுகாலை 11 மணியளவில் கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட்டது.
தேனி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கொடுவிலார்பட்டி ஊராட்சியில், ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஊராட்சித் தலைவர் ஈஸ்வரி மாரிமுத்து தலைமையில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. கிராம சபைக் கூட்டம் நடத்தப்படும் போது ஊராட்சி பகுதியிலுள்ள பொதுமக்களுக்கு தெரிவிக்கும் வகையில், விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஊராட்சி நிர்வாகம் சார்பில் சுவரொட்டிகள் மற்றும் விளம்பரங்கள் மூலம் பொது மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
அந்த வகையில், இன்று(நவ.1) நடைபெற்ற கிராம சபை கூட்டத்திற்கான சுவரொட்டிகளை ஒட்டாமல், முன்னதாக அக்.02 ஆம் தேதி காந்தி ஜெயந்தியின் போது நடைபெற்ற கிராம சபை கூட்டத்தின் போது ஒட்டப்பட்ட போஸ்டர்களிலும், துண்டுச்சீட்டுகளிலும் தேதியை மட்டும் மாற்றி பொதுமக்களிடம் கொடுத்துள்ளனர். கிராம் சபை கூட்டத்திற்காக ஒட்டப்பட்டிருந்த பிரசுரத்தைப் கண்ட பொதுமக்கள் இன்று (நவ.1) கிராம சபை கூட்டம் இருக்கின்றதா இல்லையா என தெரியாமல் குழப்பத்துடன் கூட்டத்தில் பங்கேற்றனர்.