கிராமப் பகுதிகளில் சுற்றி திரியும் ஒற்றை காட்டு யானையால் மக்கள் அச்சம் - elephant roaming around in rural areas
🎬 Watch Now: Feature Video

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த சானமாவு வனப்பகுதியில் ஒற்றை காட்டு யானை, சினிகிரிப்பள்ளி கிராம பகுதியில் உள்ள விளைநிலங்களில் நேற்று இரவு சுற்றிவந்துள்ளது. காலை நீண்ட நேரமாகியும் வனப்பகுதிக்கு செல்லாததால், கிராம மக்கள் சேர்ந்து வனப்பகுதிக்குள் விரட்டி உள்ளனர். இந்நிலையில் சானமாவு வனப்பகுதியை ஒட்டி உள்ள கிராம மக்கள் வனப்பகுதிக்கு ஆடு,மாடு மேய்ச்சலுக்கு செல்ல வேண்டாமெனவும், இரவு நேர விளைநில காவலுக்கு செல்ல வேண்டாமெனவும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Last Updated : Feb 3, 2023, 8:37 PM IST