இடிந்து விழும் நிலையில் மின் கம்பங்கள்: நடவடிக்கை எடுக்குமா மின்வாரியம்? - பாஸ்மார்பெண்டா
🎬 Watch Now: Feature Video
வேலூர்: பேரணாம்பட்டு அடுத்த பாஸ்மார்பெண்டா கிராமத்தில் மின்கம்பம் ஒன்று சேதம் கான்கிரீட் சிமென்ட் அடைந்த நிலையில் கம்பி எப்போது விழுமோ என்ற ஆபத்தான நிலையில் உள்ளது. இதனை அப்பகுதி கிராம மக்கள் மின்வாரியத் துறை அதிகாரிகளிடம் கூறியதற்கு 10 ஆயிரம் ரூபாய் செலுத்தினால் மின் கம்பத்தினை மாற்றி தருவதாக சொல்லியதாக கூறப்படுகிறது.
இதனால் அப்பகுதி கிராம மக்கள் சேதமடைந்த மின் கம்பத்திற்கு மாலை அணிவித்து மின்கம்பத்தை மாற்றி தரும் வரை கிராமத்திற்கு வரும் மின் இணைப்பு சேவையை அணைத்து வைத்து உள்ளனர். இதனால் கிராமம் முழுவதும் மின் இணைப்பின்றி உள்ளது.
மேலும் மின் துறை அதிகாரிகள் கிராமத்தில் உள்ள மின் கம்பத்தை விரைந்து மாற்றி தர வேண்டும் எனவும், இது குறித்து சம்பந்தப்பட்ட மின்வாரியத்துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், உயிரிழப்பு ஏற்படும் முன் ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தை மாற்றி அமைக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக பேரணாம்பட்டு பாஸ்மார்பெண்டா மின்வாரிய உதவி மின்பொறியாளரிடம் கேட்டபோது, "உடனடியாக மின் கம்பங்களை ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்கிறோம்" எனத் தெரிவித்தனர்.