சீட் பிடிப்பதில் சண்டை - மாணவரை தாக்கிய உடற்கல்வி ஆசிரியர் - நடவடிக்கை கோரி பெற்றோர் போராட்டம்! - Palani News in Tamil

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Mar 26, 2023, 8:05 AM IST

திண்டுக்கல்: பழனியை சேர்ந்தவர் கார்த்திகேயன்(44). சவரத் தொழிலாளியான இவருக்கு காளீஸ்வரி என்ற மனைவியும்,  13 வயது மகனும் உள்ளனர்‌. இந்நிலையில் இவரது மகன் பழனி அருகே நெய்க்காரப்பட்டியில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். 

இதனிடையே நேற்று (மார்ச்.25) வழக்கம் போல, பள்ளிக்கு சென்ற மாணவன், கை‌, கால் மற்றும் உடலில் காயங்களுடன் மாலையில் வீட்டிற்கு திரும்பினார். இவ்வாறு மகனின் உடலில் உள்ள காயங்களை கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து மாணவன் மற்றும் பெற்றோர் கூறுகையில், "பள்ளி முடிந்தவுடன், வீட்டிற்கு செல்வதற்காக பள்ளி பேருந்தில் மாணவர் ஏறிய பொழுது, பேருந்தின் இருக்கையில் அமர்வதில் சக மாணவர்களுடன் மோதல் ஏற்பட்டு உள்ளது.

இதில் சிறுவனை சக இரு மாணவர்கள் தாக்கியதாகவும், இதையடுத்து அந்த இரு மாணவர்களை சிறுவன் தாக்கியதாகவும் தெரிகிறது. இதையடுத்து பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரியும் சுரேந்தர் என்பவர், மாணவரை சிசிடிவி இல்லாத அறைக்கு அழைத்துச் சென்று, பிரம்பால் கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும், அடித்ததை வெளியே சொல்லக் கூடாது எனவும் அவர் மிரட்டியதாகவும் சொல்லப்படுகிறது. இதுகுறித்து மாணவனின் தந்தை கார்த்திகேயன் பழனி தாலுகா போலீசாரிடம் புகார் அளித்தார். 

நேற்று மாலை புகார் அளித்த நிலையில், பழனி தாலுகா போலீசார் சிறுவனிடம் தொடர்ந்து விசாரித்த படியே உள்ளனர். ஆனால் வழக்குப்பதிவு எதுவும் செய்யவில்லை. இதுமட்டுமல்லாமல் பள்ளி நிர்வாகத்திற்கு ஆதரவாக தொடர்ந்து பேசுவதும், சமரசம் செய்வதுமாக உள்ளதாக குற்றம்சாட்டி உள்ளார்‌. மேலும், மகனை தாக்கிய ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்காவிடில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தற்கொலைக்கு முயற்சி செய்ய உள்ளதாக மாணவனின் தந்தை கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.