பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் விழா.. பாதுகாப்பு பணியில் 1,500 போலீசார்.. - மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசி மோகன்
🎬 Watch Now: Feature Video

ஈரோடு மாவட்டம் பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் திருவிழாவையொட்டி பக்தர்கள் பாதுகாப்பு பணியில் 1,500 போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளதாக ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசிமோகன் தெரிவித்தார். தமிழ்நாட்டில் பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் குண்டம் விழா வரும் ஏப்ரல் 3ஆம் தேதி இரவு மற்றும் 4ஆம் தேதி அதிகாலை நடைபெறுகிறது. குண்டம் விழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசிமோகன் ஆய்வு பணிகள் மேற்கொண்டார்.
அதன்பின் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் விழாவுக்கு தமிழ்நாடு மட்டுமின்றி மற்ற மாநிலங்களில் இருந்தும் மொத்தமாக 4 லட்சம் பேர் வருகை தருவர். இந்த குண்டம் விழாவில் தீயில் இறங்கும் பகதர்களுக்குகென தனிவழியும், சாமி தரிசனமும் செய்யும் பக்தர்களுக்கு மற்றொரு தனி வழியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பக்தர்கள் போக்குவரத்து வசதிக்காக 15 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்கள் அதிகமாக கலந்துகொள்ள வாய்ப்புள்ளதால் வாகன போக்குவரத்து மாற்றும் செய்யப்பட்டுள்ளது. அதோடு வனத்தில் தீத்தடுப்பு நடவடிக்கை, பக்தர்கள் குடிநீர் வசதி, கழிப்பறை வசதி உள்ளிட்டவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த விழாவில் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். முன்னதாக ஆயுதபடை போலீசார் கூடுதலாக பயன்படுத்தவும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் 2 சுற்றுகள் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டதாக தெரிவித்தார்,
இதையும் படிங்க: அரசு மருத்துவர் தற்கொலை! - குழந்தையின்மை காரணமா?