Audio Leaks - ஊராட்சி மன்றத்தலைவரை மிரட்டிய செயலாளர்! - வைரல் வீடியோ
🎬 Watch Now: Feature Video
கோயம்புத்தூர்: பொள்ளாச்சி அருகே உள்ள அம்பராம்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவராக திமுகவைச் சேர்ந்த சகர் பானு பைசல் என்பவர் இருந்து வருகிறார். கெட்டி மல்லன் புதூர் ஊராட்சி மன்ற அலுவலகம் அங்கு செயல்படுவதால், அதில் ஈஸ்வரன் ஊராட்சி மன்றச்செயலாளராக பணியாற்றி வருகிறார்.
கடந்த 22 வருடங்களாக அப்பகுதியில் உள்ள ஊராட்சிகளில் ஈஸ்வரன் பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில தினங்களுக்கு முன்பு அம்பராம்பாளையம் ஊராட்சிக்கு ஒதுக்கப்படும் நிதிகள் மற்றும் பணிகள் குறித்து தலைவர் கேட்கும்பொழுது முறையாக ஈஸ்வரன் பதில் தெரிவிக்கவில்லை என தெரிகிறது.
பின்னர், சகர் பானு பைசல் தொலைபேசிக்கு அழைப்பு விடுத்த ஈஸ்வரன், “எல்லாத்தையும் உள்ளே தள்ளி விடுவேன். திமுக-வாக இருந்தால் என்ன, உங்களது கணவர் என்னிடம் பேசக் கூடாது, நான் நினைத்தால் ஆபீஸ் நடக்காது” என மிரட்டல் தொனியில் பேசியுள்ளார்.
இந்த ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில், ஈஸ்வரனை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என ஊராட்சி மன்றத் தலைவர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.
இதையும் படிங்க: மக்கள் பிரதிநிதிகள் யாரும் வராததால் ஈயாடிய அரசு விழா; தனி ஒருவனாக பங்கேற்ற அர்ச்சகர்!