டாடா ஏஸ் வேன் மீது பேருந்து மோதி விபத்து - ஒருவர் உயிரிழப்பு - Accident
🎬 Watch Now: Feature Video
திண்டுக்கல்: பழனி - தாராபுரம் நெடுஞ்சாலையில் உள்ள தும்பலம்பட்டி பகுதியில் வாகனங்கள் மெதுவாக செல்லும் வகையில் பேரிகார்டு அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பழனியில் இருந்து ஈரோடு சென்ற அரசு பேருந்து ஒன்று பேரிகார்டை கடக்க முயன்றபோது எதிரே சென்ற டாடா ஏஸ் வேன் மீது மோதியது. இந்த விபத்தில் டாட்டா ஏஸ் வேன் ஓட்டுநர் பாலமுருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தற்போது அந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
Last Updated : Feb 3, 2023, 8:25 PM IST