புனித வியாழனை முன்னிட்டு பாதிரியார்கள் சீடர்களின் பாதம் கழுவும் நிகழ்ச்சி நடைபெற்றது - கோட்டாரு மறைமாவட்ட ஆயர் நசரேன்
🎬 Watch Now: Feature Video
கன்னியாகுமரி: கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஈஸ்டர் பெருவிழா வரும் 9ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இயேசு தம் சீடர்களின் மதிப்பிற்கும், மரியாதைக் குறியவராக இருந்த போதும் அக்காலத்தில் ஒரு அடிமை செய்யும் வேலையான காலடிகளை கழுவும் செயலைச் செய்தார். இதன் மூலம் ஒருவர் மற்றவர்களுக்கு பணி செய்கின்ற மன நிலையைத் சீடர்கள் கொண்டிருக்க வேண்டும் என்று இயேசு செயல் முறையில் காட்டினார்.
இதனை நினைவுகூறும் விதமாக கிறித்தவக் ஆலயங்களில் இந்நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும் தவக் காலங்களில் புனித வியாழன் அன்று நடைபெறும். வழிபாடு நிகழ்த்தும் குருவானவர் தேர்ந்தெடுக்கப்பட்ட பன்னிரண்டு நபர்களின் காலடிகளை கழுவி துண்டால் துடைப்பார்.
நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் தேவாலயத்தில் நடைபெற்ற புனித வியாழன் சிறப்பு ஆராதனையை முன்னிட்டு பாதம் கழுவும் நிகழ்ச்சி நடைபெற்றது. 15க்கும் மேற்பட்ட பாதிரியார்கள் இந்த பாதம் கழுவும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். திருப்பலியை தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 12 சிறுவர் மற்றும் சிறுமிகளுக்கு பேராயர் நசரேன் சூசை பாதங்களைத் கழுவி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இயேசு பெருமான் சீடர்களுக்கு செய்த அந்த நிகழ்வை நினைவு கூர்ந்தார். இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.