ஆடி வெள்ளியை முன்னிட்டு பெரியகுளம் வரதராஜ பெருமாள் கோயிலில் ஸ்ரீ மகாலட்சுமிக்கு வளையல் காப்பு அலங்காரம்!!
🎬 Watch Now: Feature Video
தேனி: ஆடி மாத நிறைவு வெள்ளியை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள கோயில்களில் அம்மனை ஏராளமான பொதுமக்கள் தரிசித்து வருகின்றனர். இந்நிலையில் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் பெருந்தேவி தாயார் ஸ்ரீ மகாலட்சுமிக்கு ஆயிரம் வளையல்களால் வளையல் காப்பு அலங்காரம் சிறப்பாக நடைபெற்றது.
முன்னதாக தனி சன்னதியில் அமர்ந்திருக்கும் ஸ்ரீ மகாலட்சுமி தாயாருக்கு வண்ண பட்டு உடுத்தி மலர் மாலைகளால் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டும், இன்று ஆடி மாத நிறைவு வெள்ளி என்பதால் மகாலட்சுமி தாயார் ஆயிரம் வளையல்களால் வளையல் காப்பு அலங்காரம் செய்து சிறப்பு அலங்காரத்தில் அம்மன் காட்சி தந்தார்.
சிறப்பு அலங்காரத்தில் காட்சி தந்த மகாலட்சுமி தாயாருக்கு தூபம் காட்டப்பட்டு மகாதீப ஆராதனை காட்டப்பட்டது. இதில் பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் காலை முதலே மகாலட்சுமி தாயாரை தரிசித்து சென்றனர். பின்னர் கோயிலுக்கு வருகை தந்த பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.