தென்காசி அருகே ஸ்ரீ முத்தாலம்மன் தேரோட்ட திருவிழா:ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் - temple
🎬 Watch Now: Feature Video

தென்காசி: தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கூடலூரில் உள்ள ஸ்ரீ முத்தாலம்மன் திருக்கோவிலில் தேரோட்ட திருவிழா ஒவ்வொரு ஆண்டும் வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் பக்தர்கள் அனைவரும் ஒன்றிணைந்து சப்பரம் இழுத்து வழிபட்டனர்.
இந்த திருவிழாவை முன்னிட்டு இரவு நேரத்தில் சிலம்பாட்டம், கும்மியாட்டம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஏராளமான பக்தர்கள் மாவிளக்கு ஏந்தியும், அலகு குத்தியும் அவர்களது நேர்த்திக்கடனை பூர்த்தி செய்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக முன்னாள் ராணுவ சங்கத் தலைவர் உள்முடையார் மற்றும் துணைத் தலைவர் காந்தி, செயலாளர் முத்துப்பாண்டியன், பொருளாளர் இசக்கி துறை ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும், இத்திருவிழாவில் வாசுதேவநல்லூர், சிவகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதுமட்டுமல்லாமல் முன்னாள் பஞ்சாயத்து தலைவரும் முன்னாள் ராணுவத்தின் கேப்டனாக பணியாற்றிய சுப்பையா பாண்டியன் நினைவாக அவர்களது மகன் சுந்தர் அட்வகேட் பள்ளி மாணவ மாணவியருக்கு ஊக்கத்தொகையும், ஸ்கூல் பேக் மற்றும் கேடயமும் பரிசாக வழங்கினார்.