நெல்லை - துலுக்கர்பட்டியில் 2ம் கட்ட அகழாய்வுப் பணி: இதுவரை 450க்கும் மேற்பட்ட பழங்கால பொருள் கண்டெடுப்பு! - more than 450 Antiquities found excavation
🎬 Watch Now: Feature Video
திருநெல்வேலி: தமிழர்களின் தொன்மையான வாழ்வியல் நாகரிகம் பழமை வாய்ந்தது என்பதை உலகறியச் செய்யும் வகையில், தமிழ்நாட்டில் சுமார் 8 இடங்களில் அகழாய்வுப் பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு, பணிகள் முதல்கட்டமாக நடந்து முடிந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக 2ம் கட்டமாக நெல்லை மாவட்டம், வள்ளியூர் அருகே துலுக்கர்பட்டி கிராமம் நம்பியாற்றுப் படுகையிலும் அகழாய்வுப் பணிகள் மேற்கொண்டு 2ம் கட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
இந்த அகழாய்வு வாழ்விடப்பகுதியில் 8 குழிகள் அமைக்கப்பட்டு, இதுவரை 450-க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அதில், செம்பினாலான மோதிரம், இரும்பினாலான பொருட்கள், சுடுமண்ணலான விளையாட்டுப் பொருட்கள் (சில்லுகள் மற்றும் சதுரங்க காய்கள்) தக்களி, கார்னிலியன் சூதுபவளம் மணிகள், நீலக்கல் மணி, கண்ணாடி மணிகள் (70%), பளிங்கு கல்மணிகள் ஆகியவை முக்கிய தொல்பொருட்களாகும்.
மேலும், குறியீடுகள் கொண்ட பானை ஓடுகள், வெண்மை நிறத்தினால் அலங்கரிக்கப்பட்ட பானை ஓடுகள், கருப்பு - சிவப்பு பானை ஓடுகள், ஈமத்தாழிகள் என அதிக எண்ணிக்கையில் மட்பாண்ட ஓடுகள் கிடைத்து வருகின்றன. அதைத் தொடர்ந்து பல தொல்லியல் பொருட்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.