ஒரே மாதிரியான ஆடை அணிந்து ஆடி அசத்திய வள்ளி கும்மி நடனம்! - today news
🎬 Watch Now: Feature Video
ஈரோடு: சென்னிமலையில் கொங்கு பாரம்பரிய கலைகளில் ஒன்றான வள்ளி கும்மி நடனத்தை 300க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் ஒரே வண்ண ஆடை அணிந்து நடனமாடி அசத்தினர். ஈரோடு மாவட்டம் சென்னிமலை மயிலம்பாடியில் உள்ள ராஜீவ்காந்தி பாலிடெக்னிக் கல்லூரியில் வெள்ளநத்தம் சண்முகம் குழுவினரின் வள்ளி கும்மி அரங்கேற்றம் நடைபெற்றது. வள்ளி கும்மி நடனமானது கொங்கு பாரம்பரியத்தில் உள்ள முக்கிய கலையாக கருதப்படுகிறது.
மேலும், இதனை மீட்டெடுக்கும் வகையில் கொங்கு மாவட்டங்களில் கோயில் திருவிழாக்கள், கலை நிகழ்ச்சிகள் மற்றும் அரங்கேற்றங்கள் மூலம் அவ்வப்போது நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக இன்று நடைபெற்ற வள்ளி கும்மி நடனத்தில் சிறுவர், சிறுமியர், ஆண்கள் மற்றும் பெண்கள் என 300க்கும் மேற்பட்டவர்கள் ஒரே மாதிரியான ஆடை அணிந்து நாட்டுப்புற பாடலுக்கு ஏற்ப நடனமாடினர்.
300க்கும் மேற்பட்டோர் பங்கேற்று ஆடிய இந்த வள்ளி கும்மி நடனம் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. மேலும் வள்ளி கும்மி நடனத்தை அரங்கேற்றம் செய்வதன் மூலம் கலையை மீட்டெடுக்கும் இவர்களின் முயற்சியை அனைவரும் பாராட்டினர்.