வேடந்தவாடி கூத்தாண்டவர் கோயிலில் திருநங்கைகள் அழகி போட்டி.. முதல் பரிசை வென்றார் பிரிஸ்திகா! - மிஸ் வேடந்தவாடி
🎬 Watch Now: Feature Video

திருவண்ணாமலை: மங்கலம் அடுத்த வேடந்தவாடி கிராமத்தில் ஸ்ரீ கூத்தாண்டவர் திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் கூத்தாண்டவர் திருவிழா 20 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெற்று, நிறைவு நாளான 20வது நாள் தேர்த் திருவிழாவுடன் நடைபெறும்.
அதன்படி, 201ஆம் ஆண்டு கூத்தாண்டவர் திருவிழா கடந்த மாதம் 14ஆம் தேதி மகாபாரத சொற்பொழிவுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்காக சென்னை, விழுப்புரம், சேலம் மற்றும் மும்பை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து 100க்கணக்கான திருநங்கைகள் வேடந்தவாடியில் குவிந்தனர்.
இந்த நிலையில், திருவிழாவின் 19ஆம் நாளான நேற்று (மே 2), திருக்கோயிலில் பெண்கள் பொங்கல் வைத்து ஊர்வலமாக வந்து சாமிக்கு படைத்தல், பெண் அழைப்பு நிகழ்ச்சி, திருநங்கைகளுக்கான தாலி கட்டும் நிகழ்ச்சி ஆகியவை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, திருநங்கைகளுக்கான அழகி போட்டி நடைபெற்றது. இந்த அழகி போட்டியில் சென்னையைச் சேர்ந்த பிரிஸ்திகா முதல் பரிசையும், மேல்மலையனூரைச் சேர்ந்த ரோஜா 2வது பரிசையும் மற்றும் சென்னையைச் சேர்ந்த அமிஸ்தா 3வது பரிசையும் பெற்றனர்.