CCTV: மாமூல் தராததால் ஆத்திரம் - வீச்சரிவாளால் உணவகத்தை அடித்து நொறுக்கிய கும்பல் - Parotta
🎬 Watch Now: Feature Video
திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி வ.உ.சி சாலையில் உள்ள உணவகம், மருந்தகம், மளிகை கடைகள் உள்ளிட்ட கடைகளில் மூன்று பேர் கொண்ட மர்மக்கும்பல், கடை உரிமையாளர்களிடம் பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று இரவு வ.உ.சி சாலையில் உள்ள பரோட்டா கடை ஒன்றிற்கு வந்த மூன்று பேர் கொண்ட மர்மக்கும்பல் பரோட்டா கடை உரிமையாளரிடம் ஆயிரம் ரூபாய் பணத்தை மாமூல் கேட்டு மிரட்டியுள்ளனர்.
இதனை அடுத்து கடைக்காரருக்கும் அந்த மூன்று பேர் கொண்ட மர்மக்கும்பலுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த மர்மக்கும்பல் உணவகத்தில் சாப்பிட வந்த நபர் ஒருவரை வீச்சரிவாளால் வெட்டியுள்ளனர். மேலும், கடையில் இருந்த உணவுப்பொருட்கள், பாத்திரங்களை கீழே தள்ளி உடைத்து பிரச்னை செய்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், விசாரணை செய்து சி.சி.டி.வி காட்சிகளின் அடிப்படையில் பிரசாத் என்பவரை கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய இருவரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்த நிலையில் தற்போது மர்ம நபர்கள் உணவகத்தை அடித்து நொறுக்கும் சி.சி.டி.வி காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.