Manimandapam for Elephant Rukku: அண்ணாமலையார் கோயில் யானை ருக்குக்கு மணிமண்டபம் - பூஜை இனிதே நிறைவு! - rukku

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 13, 2023, 2:49 PM IST

திருவண்ணாமலை: பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாக விளங்குவது திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில். இக்கோயிலில் இருந்த 'ருக்கு' என்ற யானை பல ஆண்டுகளாக கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஆசி வழங்கி வந்தது. இதுமட்டுமின்றி உலகப் பிரசித்தி பெற்ற திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் போது பஞ்சமூர்த்திகளின் உற்சவம் மாடவீதியில் செல்லும் போது யானை ருக்கு உற்சவத்திற்கு முன்பாக செல்லுவது வழக்கம். 

இந்நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு கோயில் யானை ருக்கு, உடல்நிலை சரியில்லாத காரணத்தால் காலமானது. இதனைத் தொடர்ந்து, யானை ருக்குவிற்கு பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் இணைந்து அஞ்சலி செலுத்தி, ராஜகோபுரம் அருகே வட ஒத்தவாடை தெருவில் நல்லடக்கம் செய்தனர். 

இதனைத் தொடர்ந்து அண்ணாமலையார் கோயில் யானைக்கு மணிமண்டபம் கட்டப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. தற்போது அண்ணாமலையார் கோயில் யானை ருக்குக்கு சுமார் 49 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 400 சதுர அடியில் மணிமண்டபம் கட்டும் பணியை திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் பூஜை செய்து துவக்கி வைத்தார்.  

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.