சரக்கு ரயிலில் கண்டெய்னர் மேல் நின்றபடி பயணம் செய்த நபரால் பரபரப்பு! - சரக்கு ரயிலில் கண்டெய்னர் மேல் நின்றபடி பயணம்
🎬 Watch Now: Feature Video

திருப்பத்தூர்: ஆம்பூரில் இருந்து ஜோலார்பேட்டை நோக்கி சென்று கொண்டிருந்த கண்டெய்னர் சரக்கு ரயில் மீது நபர் ஒருவர் நின்று கொண்டு செல்லும் காட்சியை பார்த்த வாணியம்பாடி ரயில் பயணிகள் உடனடியாக கூச்சலிட்டனர். சுதாரித்த வாணியம்பாடி ரயில்வே நிலைய அதிகாரி ரயில் நிலையத்தில் மூன்றாவது நடைமேடையில் ரயிலை நிறுத்தி மின் இணைப்பை துண்டித்தார். பின்னர் அந்த நபர் பயணிகள் உதவியுடன் பாதுகாப்பாக மீட்கப்பட்டார். இச்சம்பவத்தால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
Last Updated : Feb 3, 2023, 8:23 PM IST