தமிழ்நாடு பாரம்பரிய முறைப்படி மலேசிய ஹாக்கி வீரர்களுக்கு வரவேற்பு! - ஆசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் தொடர்
🎬 Watch Now: Feature Video
சென்னை: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் மலேசியா ஹாக்கி வீரர்களுக்கு சந்தன மாலை அணிவித்து வரவேற்பு அளித்தனர். மலேசிய ஹாக்கி அணி வீரர்கள் மற்றும் அணி நிர்வாகம் உட்பட 29 பேர் வருகை தந்தனர். இன்று (ஜூலை 30) இரவு கொரியா, ஜப்பான் மற்றும் இந்திய அணி வீரர்களும், நாளை (ஜூலை 31) பாகிஸ்தான், சீன வீரர்களும் சென்னைக்கு வருகை தரவுள்ளனர். ஆகஸ்ட் 3 முதல் 12 வரை ''ஆசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் தொடர்'' சென்னையில் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய மலேசிய ஹாக்கி அணியின் தலைமை பயிற்சியாளர் அருள் அந்தோணி, 'ஆட்டத்தில் கவனம் செலுத்துவோம். எந்த ஒரு வீரரும் காயம் ஏற்படாத வண்ணம் ஆடுவதில் கவனம் செலுத்துவோம். சிறந்த வீரர்களை போட்டிக்காக அழைத்து வந்துள்ளோம். இந்தியாவிலேயே எப்பொழுதும் சென்னை சிறப்பு தான். அந்த வகையில் தமிழ்நாடு அரசு சார்பில் எங்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மிக்க நன்றி' என்றார்.