Audio Leak: பேரம் பேசினாரா மதுவந்தி? - ஆடியோ ரிலீஸ் - பத்ம சேஷாத்ரி பள்ளி
🎬 Watch Now: Feature Video
சென்னை: பத்ம சேஷாத்ரி பள்ளியில் சீட்டு வாங்கி தருவதாக நடிகர் ஒய்.ஜி மகேந்திரனின் மகள் மதுவந்தி ரூ. 6 லட்சம் பணம் பெற்று மோசடி செய்துவிட்டதாக கூறி, மேற்கு மாம்பலத்தை சேர்ந்த கிருஷ்ணபிரசாத் என்பவர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். அவர் தன் மீது பொய்யான புகார் கொடுத்திருப்பதாகவும், ஒரு ரூபாய் கூட கிருஷ்ணபிரசாத்திடம் இருந்து தான் பெறவில்லை எனவும் மறுப்பு தெரிவித்து மதுவந்தியும் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார். இந்நிலையில், பள்ளியில் சீட்டு வாங்கி தருவது குறித்து மதுவந்தி, கிருஷ்ணபிரசாத்திடம் பேசிய ஆடியோ தற்போது வெளியாகி உள்ளது.
Last Updated : Feb 3, 2023, 8:24 PM IST