சப்பாத்தியில் கருணாநிதியின் நெருப்பு ஓவியம் - கோவை ஓவியரின் அசத்தல் வீடியோ! - கருணாநிதி ஓவியத்தை சப்பாத்தியில் வரைந்து அசத்தல்
🎬 Watch Now: Feature Video
கோயம்புத்தூர்: குனியமுத்தூர் பகுதி சேர்ந்தவர் யுஎம்டி ராஜா. தங்க நகை தொழிலாளியான இவர் தங்க கட்டிகளில் பல்வேறு ஓவியங்கள் வரைந்து உள்ளார். குறிப்பாக அப்துல் கலாம், எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரின் உருவங்களையும் மிகச் சிறிய அளவில் வடிவமைத்து உள்ளார். இந்நிலையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 100-வது பிறந்த நாளை முன்னிட்டு யூஎம்டி ராஜா சப்பாத்தியில் நெருப்பு ஓவியம் வரைந்து உள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், "தங்க நகை தொழிலாளியான தான் பல்வேறு தலைவர்களை உருவங்களை மிகச் சிறிய அளவிலான தங்கத்தில் வடிவமைத்துள்ளேன். தற்போது முன்னாள் முதலமைச்சர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி 100-வது பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு பெருமை சேர்க்கும் வகையில், ஏதாவது ஒரு சாதனை செய்ய வேண்டும் என நினைத்திருந்தேன்.
ஏற்கனவே மிகச் சிறிய அளவிலான தங்கத்தில் தலைவர்களின் உருவங்கள் வடிவமைத்துள்ளதால், வித்தியாசமாக ஏதாவது செய்ய வேண்டும் என எண்ணி சப்பாத்தியில் நெருப்பு ஓவியம் வரைந்து உள்ளேன். சுமார் 3 மணி நேரம் மிகவும் சிரமப்பட்டு நெருப்பில் கம்பியை காய்ச்சி அவரின் உருவத்தை சப்பாத்தியில் வரைந்துள்ளேன். இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் இதுபோன்று பல்வேறு சாதனைகளை செய்ய வேண்டும் என்பதே எனது ஆசை" என்று தெரிவித்தார்.