தேனியில் மழலையர்களின் கியூட் பொங்கல் திருவிழா.. ஜல்லிக்கட்டு போட்டிகளுடன் கோலாகலம்! - பாரம்பரிய உடையில் குழந்தைகள்
🎬 Watch Now: Feature Video
Published : Jan 12, 2024, 2:12 PM IST
தேனி: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தேனி அடுத்த மேலப்பேட்டை பகுதியில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், மழலையர்களின் பொங்கல் விழா இன்று (ஜன.12) சிறப்பாக கொண்டாடப்பட்டது. அப்போது மேடையில், கூரை வீடு, பொங்கல் பாணை, மாட்டு வண்டி, உரல், உலக்கை போன்றவற்றின் மாதிரிகள் மேடையில் அமைக்கப்பட்டிருந்தது.
பின்னர், பொங்கல் பாடல்களை குழந்தைகள் பாடி, அனைவரும் பொங்கலோ பொங்கல் என மழலை மொழியில் கோஷமிட்டது அனைவரையும் நெகிழ்வடையச் செய்தது. அதனைத் தொடர்ந்து, பாரம்பரிய உடைகளில் வந்த குழந்தைகள், திரைப்படப் பாடல்களுக்கு மேடையில் நடனமாடி மகிழ்ந்தனர். அதன் தொடர்ச்சியாக, ஜல்லிக்கட்டு போட்டியைப் போன்று குழந்தைகள் விளையாடி காட்டியது விழாவில் சிறப்பாக கருதப்பட்டது.
இது குறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் பூரண செல்வி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய அவர், "இன்று (ஜன.12) மழலையர்களுக்கான பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது. அதில் குழந்தைகளுக்கு, தமிழர் பாரம்பரிய உணவு, கலாச்சாரம், விளையாட்டு ஆகியவை குறித்து மழலையருக்கு தெளிவுபடுத்தும் விதமாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது. குழந்தைகள் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று மகிழ்ந்தனர்" எனக் கூறினார்.