கீழ்பென்னாத்தூர் ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி அம்மன் வல்லாள கண்டி சம்ஹாரம்! - Spiritual news
🎬 Watch Now: Feature Video
திருவண்ணாமலை: கீழ்பென்னாத்தூர் ஸ்ரீ ஆஞ்சநேயர் குளக்கரையில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயிலில் மாசி மாத திருவிழாவை முன்னிட்டு, நேற்று (பிப்.23) இரவு வல்லாள கண்டி சம்ஹாரம் மற்றும் அம்மன் வீதி உலா நடைபெற்றது. இதனை ஒட்டி நேற்று காலை ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி அம்மனுக்குச் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து இரவு மங்கள மேளதாளத்துடன், வல்லாள கண்டி சம்ஹாரம் நடைபெற்று, அம்மன் அலங்காரத்தில் வீதி உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.