தூத்துக்குடியில் வட மாநில தொழிலாளரை தாக்கி பணம், செல்போன் பறிப்பு - வட மாநில லாரி டிரைவர் தாக்குதல்
🎬 Watch Now: Feature Video
தூத்துக்குடி மாவட்டத்தில் வட மாநில லாரி ஓட்டுநரை தாக்கி அவரிடமிருந்து ரூ. 13 ஆயிரம் பணம் மற்றும் ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை பறித்து சென்ற 3 அடையாளம் தெரியாத நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த டிப்பான் யாதவ் என்பவரது மகன் பிக்கி யாதவ் (39).
இவர் லாரி டிரைவராக இருந்து வருகிறார். இதனிடையே தமிழ்நாட்டின் அரியலூரில் இருந்து லாரியில் சிமெண்ட் லோடு ஏற்றிக் கொண்டு தூத்துக்குடிக்கு வந்துள்ளார். நேற்று இரவு 9.45 மணியளவில் துறைமுகம்-திருச்செந்தூர் பைபாஸ் சாலையோரத்தில் லாரியை நிறுத்திவிட்டு டீ குடிக்கச் சென்றுள்ளார்.
அப்போது, ஒரே பைக்கில் அங்கு வந்த 3 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்தது. இதையடுத்து கத்தியைக் காட்டி மிரட்டி அவரிடம் இருந்த ரூ.13 ஆயிரம் ரொக்கப் பணம், ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை பறித்துச் சென்றுள்ளது. இதுகுறித்து, பிக்கி யாதவ், தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் உடனடியாக புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாராம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.