திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகை ஜான்வி கபூர் சாமி தரிசனம்! - Tirupati janhvi kapoor
🎬 Watch Now: Feature Video
Published : Aug 28, 2023, 12:59 PM IST
ஆந்திரா: திருப்பதி சென்ற மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளும் பாலிவுட் நடிகையுமான ஜான்வி கபூர் ஏழுமலையானை தரிசனம் செய்தார். தேவஸ்தான அதிகாரிகள் நடிகை ஜான்வி கபூர் தரிசனம் செய்ய ஏற்பாடுகளை செய்து, தீர்த்த பிரசாதங்கள் வழங்கினர். வழக்கமாக குடும்பத்தாருடன் தரிசனம் செய்யும் ஜான்வி கபூர், இந்த முறை தனியாக வந்து சாமி தரிசனம் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜான்வி கடைசியாக வருண் தவானுடன், நிதேஷ் திவாரி இயக்கிய பவால் படத்தில் நடித்தார். இதற்கிடையில், ராஜ்குமார் ராவுடன் இணைந்து நடித்துள்ள ’மிஸ்டர் அண்ட் மிஸஸ் மஹி’ என்ற விளையாட்டை மையமாக கொண்ட திரைப்படத்தில் நடித்து உள்ளார். மேலும் நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் நடித்த தேவாரா மூலம் தென்னிந்திய சினிமாவிலும் நடிகை ஜான்வி கபூர் நுழைய உள்ளார்.
மேலும் வரும் அக்டோபர் 4 ஆம் தேதி தொடங்க உள்ள உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழாவை ’கேப்டன்ஸ் டே’ என்று அழைக்க ஐசிசி மற்றும் பிசிசிஐ இணைந்து முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த தொடக்க விழாவில் ஜான்வி கபூர் மற்றும் சமந்தா ஆகியோரது நடன நிகழ்ச்சியும் நடக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.