Shubman Gill : அகமதாபாத்தில் சுப்மான் கில்! பாகிஸ்தான் ஆட்டத்தில் பங்கேற்பாரா? - சுப்மான் கில்
🎬 Watch Now: Feature Video
Published : Oct 12, 2023, 4:08 PM IST
அகமதாபாத் : டெங்கு காயச்சல் பாதிப்பால் அவதிப்பட்ட இந்திய அணியின் தொடக்க வீரர் சுப்மான் கில் அகமதாபாத் சென்று உள்ளார். வரும் 14ஆம் தேதி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் அவர் கலந்து கொள்வாரா என்ற யூகங்கள் கிளம்பி உள்ளன.
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில்லுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக கடந்த அக்டோபர் 8ஆம் தேதி நடந்த ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் களமிறங்கவில்லை. தொடர்ந்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு பல்வேறு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக தகவல் கூறப்பட்டது.
இந்நிலையில், அவர் டெங்கு காய்ச்சல் பாதிப்பில் இருந்து குணமடைந்து விட்டதாகவும், பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பங்கேற்பார் என்றும் தகவல்கள் பரவின. இந்நிலையில், சுப்மான் கில் அகமதாபாத் சென்று உள்ளார். இதன் மூலம் அவர் 14ஆம் தேதி நடைபெறும் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பங்கேற்பார் என தெரிகிறது.
அணியில் சுப்மான் கில் இல்லாத நேரத்தில் அவருக்கு பதிலாக இஷான் கிஷன் களமிறங்கினார். கடந்த இரண்டு ஆட்டங்களில் அவரது ஆட்டம் பெரியளவில் இல்லாத நிலையில், பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அவருக்கு பதிலாக சுப்மான் கில் களமிறக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.