அமைச்சர் எ.வ.வேலு; விழுப்புரத்தில் 3 நாட்களாக நடைபெற்ற ஐடி ரெய்டு நிறைவு!
🎬 Watch Now: Feature Video
Published : Nov 5, 2023, 10:43 PM IST
விழுப்புரம்: தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலுவுக்கு சொந்தமான அவருக்கு நெருக்கமாக இருந்த தொடர்புடைய 20க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை தொடர்ந்து மூன்று நாட்களாக நடைபெற்று வந்தது.
இந்நிலையில், விழுப்புரத்தில் உள்ள கோல்டன் பார்க் மற்றும் கோல்டன் கிரானைட் ஆகிய நிறுவனங்கள் மற்றும் கோல்டன் பார்க் உரிமையாளருக்குச் சொந்தமான வீடு ஆகியவற்றில் தொடர்ந்து மூன்று நாட்களாக வருமானவரித்துறை சோதனை நடைபெற்று வந்தது.
இந்நிலையில், கோல்டன் பார்க் மற்றும் அது தொடர்புடைய நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை நிறைவு பெற்றது. தொடர்ந்து கோல்டன் பார்க் உரிமையாளர் பிரேம் நாத்தின் இல்லத்தில் தொடர்ந்து வருமானவரித் துறை சோதனை நடைபெற்று வருகிறது. நேற்று பிரேம்நாத் மற்றும் அவரது குடும்பத்தார் ஆகியோர் தனித்தனியே அழைத்துச் செல்லப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.
இதுவரை ஆவணங்கள் எதுவும் கைப்பற்றியதாக வருமான வரித்துறையினர் தெரிவிக்கவில்லை. கடந்து 2005ஆம் ஆண்டு திருவண்ணாமலையில் அமைச்சர் வேலுவுக்கு சொந்தமான கல்லூரி ஒன்றுக்கு பிரேம்நாத் கிரானைட் விற்பனை செய்துள்ளார். அதனைத் தொடர்ந்து தான் விசாரணை என்பது முதல் கட்டமாகத் தொடங்கியது தெரிய வந்துள்ளது.