thumbnail

மாற்றுத்திறனாளி மகளுடன் 20 ஆண்டாக பஸ் ஸ்டாப்பில் தஞ்சம்.. தமிழக அரசு உதவ கண்ணீர் மல்க கோரிக்கை!

By

Published : Mar 27, 2023, 2:07 PM IST

புதுக்கோட்டை: தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களின் எல்லைப் பகுதியில் உள்ள கறம்பக்குடி அருகே கோட்டைக்காடு பகுதியில் வசித்து வந்த சுப்பிரமணியன் (வயது 70). இருபது ஆண்டுகளுக்கு முன்பு அவரது மனைவி உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார். பின்னர், புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை பேருந்து நிலையம் அருகே தேசிய நெடுஞ்சாலை சாலை ஓரத்தில் வட்டாட்சியர் அலுவலகம் அருகில் உள்ள பயணியர் நிழற்குடையில் தஞ்சமடைந்த சுப்பிரமணியன் அங்கேயே வசித்து வருகிறார்.

நிழற்குடையை ஒரு வீடாக மாற்றி 20 ஆண்டு காலமாகச் சுப்பிரமணியன் எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லாமலும், பாதுகாப்பின்றியும் 21 வயதாகும் மாற்றுத்திறனாளி மகளுடன் பல இன்னலுக்கு மத்தில் வாழ்ந்து வருகிறார். தள்ளாத வயதிலும் மிதிவண்டியில் ஐஸ் வியாபாரம் செய்து வரும் சுப்பிரமணியன் அதன் மூலம் கிடைக்கும் வருவாயில் வாழ்க்கை நடத்தி வருகிறது.

இது தொடர்பாக சுப்பிரமணியன் கூறியதாவது "அடிக்கடி அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்படுவதால் உண்ண உணவின்றி பசியில் வாடுவதாகவும், தாங்கள் இருக்கும் இடத்தில் இரவு நேரங்களில் சில மதுப் பிரியர்கள் வந்து மகளைக் கேலி கிண்டல் செய்கின்றனர். ஒவ்வொரு நாளும் இரவு நேரத்தில் அச்சத்தில் வாழ்ந்து வருகிறோம். எனது மகளது வாழ்க்கை கேள்விக்குறியாக உள்ளது என்று வேதனை தெரிவித்த அவர் இருப்பதற்கு இடம் கொடுத்து தங்களது வாழ்வாதாரத்தையும், தனது மகளின் வாழ்வாதாரத்தையும் காப்பாற்றி கொடுக்க வேண்டும்" என தமிழக அரசுக்கு கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.