திண்டுக்கல்லில் மாற்றுத்திறனாளிகள் ரோஜா பூக்களுடன் மனித சங்கிலி போராட்டம் - எதற்காக தெரியுமா? - Etvbharat news
🎬 Watch Now: Feature Video


Published : Oct 26, 2023, 10:30 AM IST
திண்டுக்கல்: சர்வதேச உயரம் வளர்ச்சி தடைபட்டோர் தினம் நேற்று (அக்.25) உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. இந்நிலையில், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் அலுவலகம் முன்பாக 30க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் ரோஜா பூக்கள் ஏந்தியும், கோரிக்கை பதாகைகள் ஏந்தியும் மனித சங்கிலி கண்டன போராட்டம் நடத்தினர்.
மூன்று சதவீத இடஒதுக்கீட்டில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும், புதிய பேருந்துகளில் சாய்தள படிக்கட்டுகள் அமைத்து தர வேண்டும் என்றும், பொது இடங்களில் சாய்வு தளமான குடிநீர் குழாய்கள் அமைத்து தர வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்தனர்.
மேலும் பொதுக் கட்டிடங்கள் மற்றும் கழிவறைகள், தாங்கள் பயன்படுத்தக்கூடிய வகையில் அரசு கட்டித் தர வேண்டும் என்றும், அவை குழந்தைகள் பயன்படுத்துமாறு இருக்கக்கூடிய கழிவறைகளாக இருக்க வேண்டும் எனவும் 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து இவர்களின் கோரிக்கைகள் மனுக்களாக மாவட்ட ஆட்சியரிடம் கொடுக்கப்பட்டது.