சத்தியமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விடிய விடிய கனமழை.. நீரோடைகளில் வெள்ளப்பெருக்கால் போக்குவரத்து பாதிப்பு! - பவானிசாகர் சாலையில் போக்குவரத்து பாதிப்பு
🎬 Watch Now: Feature Video
Published : Nov 9, 2023, 3:48 PM IST
ஈரோடு: சத்தியமங்கலம் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், சத்தியமங்கலம் அருகே புஞ்சை புளியம்பட்டி கிராம சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை விடிய விடிய கனமழை பெய்தது.
இதன் காரணமாக சிறு சிறு குளம், குட்டைகளில் மழைநீர் நிரம்பி, வெள்ள நீர் வெளியேறியது. மேலும் பல்வேறு பள்ளங்கள் மற்றும் நீரோடைகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக புஞ்சைப் புளியம்பட்டி பவானிசாகர் சாலையில் கணக்கரசம்பாளையம் தடுப்பணை தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி, செந்நிற மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
வெள்ளப்பெருக்கு காரணமாக பவானிசாகர் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அரசுப் பேருந்து உள்ளிட்ட ஒரு சில வாகனங்கள் வெள்ள நீரில் ஊர்ந்தபடி செல்கின்றன. மேலும் அருகே உள்ள தாசம்பாளையம், பணையம்பள்ளி உள்ளிட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.
தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி வெள்ளநீர் சென்றதால் இருசக்கர வாகனங்களில் வேலைக்கு செல்வோர், பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். தற்போது வெள்ளநீர் வடிந்து வருவதால் மக்கள் நிம்மதியடைந்துள்ளனர். கனமழை பெய்து நீரோடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், நிலத்தடி நீர்மட்டம் உயர வாய்ப்புள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.