தேனியில் இரண்டாம் போக நெல் சாகுபடி அறுவடை.. மகசூல் அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி! - second phase
🎬 Watch Now: Feature Video

தேனி: தேனி மாவட்டம், பெரியகுளம் பகுதியைச் சுற்றி உள்ள பகுதியில் 5000க்கும் மேற்பட்ட ஏக்கரில் கோவை 43 மற்றும் 45, ஆடுதுறை 39, 45, என்.எல்.ஆர், ஐ.ஆர் 20, நெல்லூர் 449, உள்ளிட்ட ரக நெல் சாகுபடியை விவசாயிகள் மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் கோடை மழையும், தென்மேற்கு பருவமழையும் தொடர்ந்து பெய்ததால் பெரியகுளம், ஆண்டிகுளம், பூலாங்குளம் உள்ளிட்ட பகுதியில் 2000க்கும் மேற்பட்ட ஏக்கரில் நடவு செய்யப்பட்ட இரண்டாம் போக நெல் சாகுபடி நல்ல விளைச்சல் அடைந்துள்ளது.
இதனைத்தொடர்ந்து விவசாயிகள் நெல் அறுவடை பணிகளில் தீவரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும், தொடர்ந்து பெய்த பருவமழையால் இந்த ஆண்டு இரண்டாம் போகச் சாகுபடியில் ஏக்கருக்கு 35 முதல் 40 மூட்டை அறுவடையாகி நல்ல விளைச்சல் கிடைத்துள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர். அதோடு, தங்கள் பகுதியில் அறுவடை பணிகள் துவங்கி உள்ளதால் தமிழ்நாடு அரசு தற்காலிக நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை உரிய நேரத்தில் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.