'ரோட்டுல நின்னு சோறு ஊட்டுனது குத்தமா' மின்னல் வேகத்தில் செல்போன் பறித்த நபரின் வீடியோ! - திருட்டு
🎬 Watch Now: Feature Video
ராணிப்பேட்டை: ஆற்காடு அடுத்த மாசாப்பேட்டை அருகே உள்ள தமிழக வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் தனது பேரனுக்குச் சாலையில் வேடிக்கை காட்டி சாப்பாடு ஊட்டிக்கொண்டிருந்த தாத்தாவின் கையிலிருந்த செல்போனை மர்மநபர் பிடுங்கிக் கொண்டு ஓடும் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஆற்காடு அடுத்த மாசாப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வருபவர் ஜேக்கப். இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற நிலையில், நேற்றிரவு தனது பேரனுக்குச் சாலையில் வேடிக்கை காட்டியபடி சாப்பாடு ஊட்டிக் கொண்டிருந்துள்ளார். அப்போது அந்த வழியாக வந்த மர்ம நபர் ஒருவர் ஜேக்கப் கையிலிருந்த செல்போனை திடீரென பிடுங்கிக் கொண்டு ஓட்டம் பிடித்துள்ளார். அவரை துரத்திச் சென்றும் பிடிக்க முடியவில்லை.
இந்த காட்சிகள் சம்பவம் நடந்த இடத்தில் ஒரு வீட்டில் பாதுகாப்பிற்காக வைக்கப்பட்டுள்ள சிசிடிவியில் பதிவான நிலையில், தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகிவருகிறது. ஆற்காடு நகரக் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அவ்வப்போது செல்போன் பறிப்பு சம்பவங்கள் அரங்கேறி வருவதால் இதன் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.